படைப்பாளன்
“உ லகிலேயே கொடுமையான திருட்டு, ஒரு படைப்பாளியின் அறிவை திருடுவதுதான். படம் படைப்பாளன் முன்னோட்டம் பார்க்கலாம்.;
கதை திருடர்களை கண்டிக்கும் ‘படைப்பாளன்’ - அறிவை திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள், அந்த அளவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்பு அளவு கூட கண்டு கொள்வதில்லை. இப்படியான அறிவு திருட்டு, கதை திருட்டு என்ற பெயரில் தமிழ் சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான், ‘படைப்பாளன்’ என்கிறார், அந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள எல்.எஸ்.பிரபுராஜா.
“ஏழ்மையில் சிக்கி தவிக்கும் உதவி டைரக்டர்களை கார்பரேட் நிறுவனங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன? என்பதை படத்தின் முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம். உதவி டைரக்டர்களின் வாழ்க்கை துயரம் நிறைந்தது. அவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை, பெரும் சங்கடம்தான். இவர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை படம் சித்தரிக்கிறது” என்றும் கூறுகிறார், டைரக்டர் பிரபுராஜா.
மனோபாலா, தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், அஸ்மிதா ஆகியோரும் ‘படைப்பாளன்’ படத்தில் நடித்துள்ளனர்.