அழியாத கோலங்கள் 2

எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி நடித்துள்ள ’அழியாத கோலங்கள் 2’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2019-12-29 09:22 IST
எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் எம்.ஆர். பாரதி கூறுகையில், ‘‘பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என பெயர் வைத்துள்ளோம்.

இந்தப் படத்தில் ஹீரோவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்துள்ளனர். நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நடிகர் நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

இசை அரவிந்த் சித்தார்த்தா,  ஓளிப்பதிவு காசி விஸ்வநாதன்.

மேலும் செய்திகள்