இருட்டு

வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `இருட்டு' படத்தின் முன்னோட்டம்.;

Update:2019-12-29 10:09 IST
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி.இசட்.துரை  இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு'.  திகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு.

மேலும் செய்திகள்