சர்வர் சுந்தரம்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் - வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வர் சுந்தரம்' படத்தின் முன்னோட்டம்.;
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `சக்க போடு போடு ராஜா' போதிய வரவேற்பை பெறவில்லை.
ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ஆர்.பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.