பரமபத விளையாட்டு

திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ ஒரு இரவுக்குள் நடக்கும் திகில் படம் படத்தின் முன்னோட்டம்.;

Update:2020-01-28 22:27 IST
திரிஷா திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவர் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் அனைத்து பிரபல கதாநாயர்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார். சமீபகாலமாக அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

‘பரமபத விளையாட்டு’ என்ற புதிய படத்தில் அவர் அதிரடி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அவர் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பது, இதுவே முதல் முறை. இது, அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது. சம்பவங்கள் அனைத்தும் ஒரு இரவில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இது, திரிஷாவின் 60-வது படம். அவருடன் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு பணிகள் இப்போது நடைபெறுகிறது. இந்த படத்தின் வினியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியிருக்கிறார். படம், இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் செய்திகள்