அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல படத்திற்காக அடர்ந்த காட்டுக்குள் சாகச ஸ்டண்ட் காட்சிகளில் அமலாபால் நடித்ததாக இயக்குனர் கூறியுள்ளார். "அதோ அந்த பறவை போல" படத்தின் முன்னோட்டம்.;

Update:2020-02-01 04:32 IST
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், ‘அதோ அந்த பறவை போல’. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதை நாயகியாக நடித்துள்ளார்.

கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை  உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

மேலும் செய்திகள்