தமயந்தி

‘இயற்கை,’ ‘மீசை மாதவன்’ உள்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், குட்டி ராதிகா. இவர், கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.;

Update:2020-03-06 20:22 IST
குட்டி ராதிகா நடித்த மிரட்டலான திகில் படம், ‘தமயந்தி’

நீண்ட இடைவெளிக்குப்பின் குட்டி ராதிகா, ‘தமயந்தி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இது, ஒரு மிரட்டலான திகில் படம். இதில், ரஜினிகாந்தின் நண்பரான ராஜ்பகதூர், முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

முன்னணி டைரக்டர்கள் பலரிடம் பயிற்சி பெற்ற நவரசன், கதை-திரைக்கதை எழுதி, தயாரித்து, டைரக்டும் செய்திருக்கிறார். ‘தமயந்தி’ படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“1980-ம் ஆண்டில் கதாநாயகி குட்டி ராதிகாவையும், அவருடைய குடும்பத்தினரையும் இருந்த இடம் தெரியாத அளவுக்கு சில சதிகாரர்கள்அழித்து விடுகிறார்கள். அவர்களை குட்டி ராதிகா எப்படி பழிவாங்குகிறார்? என்பது, ‘தமயந்தி’ படத்தின் கதை. மிரட்டலான திகில் படமாக தயாராகி இருக்கிறது.

ஒரு காட்சியில் கண்சிமிட்டாமல், லென்ஸ் பொருத்தி நடிக்க வேண்டும்” என்று குட்டி ராதிகாவிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். 3 நிமிடம் 16 வினாடிகள் கண் சிமிட்டாமல் ஒரே ‘டேக்’கில், குட்டி ராதிகா நடித்தார். அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.”

மேலும் செய்திகள்