பிளாஷ்பேக்
அழகான காதல் பின்னணியில் ரெஜினா கசன்ட்ராவின் ‘பிளாஷ்பேக்’ படத்தின் முன்னோட்டம்.;
ரெஜினா கசன்ட்ரா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் இப்போது, ‘பிளாஷ்பேக்’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இதில் அவர் பள்ளிக் கூட ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். டான் சேண்டி கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:
“அழகான காதல் பின்னணியில், ‘பிளாஷ்பேக்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த சம்பவங்களை நினைவூட்டும்.
ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் 20 நாட்கள் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருக்கிறது” என்றார், டைரக்டர் டான் சேண்டி.