3.33
‘3.33’ படத்துக்காக வாடகைக்கு வீடு எடுத்து பேய் பங்களாவாக மாற்றினார்கள் படத்தின் சினிமா முன்னோட்டம்;
“நகைச்சுவை கலந்த பேய் படங்கள் நிறைய வந்து விட்டன. இதனால் பேய்கள் மீது பயம் போய், சிரிப்புதான் வருகிறது. இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்து வருகிறது, ‘3.33’ என்ற பேய் படம்” என்கிறார், டைரக்டர் நம்பிக்கை சந்துரு. படத்தை பற்றி இவர் மேலும் கூறுகிறார்:-
“இந்தப் படத்தில் சான்டி, சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள். டி.ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார். படத்தில் பாடல்கள் இல்லை. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும்.
படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார், டைரக்டர் நம்பிக்கை சந்துரு.
‘3.33’ படத்தில் அமானுஷ்ய ஆய்வாளராக கவுதம் வாசுதேவ் மேனன்
தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான கவுதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதுடன் நடித்தும் வருகிறார். நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘3.33’ படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நம்பிக்கை சந்துரு இயக்குகிறார். டி.ஜீவதா கிஷோர் தயாரிக்கிறார்.
திகிலூட்டும் பேய் படமாக உருவாகும் இந்த படத்தில், கவுதம் வாசுதேவ் மேனன் அமானுஷ்யம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளராக நடித்து வருகிறார். ‘3.33’ படத்தில் அவர் நடிப்பது பற்றி டைரக்டர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது:-
“கவுதம் வாசுதேவ் மேனனின் வருகை, எங்கள் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தி இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.
சரவணன், மைம் கோபி, ஸ்ருதி, ரமா, ரேஷ்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். சதிஷ் மனோ கரன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்சவர்தன் இசை அமைக்கிறார்”.