சர்ப்ப கிரகங்கள்
நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு புராண படம் படத்தின் முன்னோட்டம்.;
தமிழ் திரையுலகில் நீண்ட இடை வெளிக்குப்பின் ஒரு புராண படம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்துக்கு, ‘சர்ப்ப கிரகங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில் சிவனாக சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார். திருமாலாக விக்னேசும், துர்க்கையாக கஸ்தூரியும் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.மனோகரின் நாடக குழுவில் நடித்த துரை பாலசுந்தரம் இயக்கி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர் கூறியதாவது:
“நவக்கிரகங்களில் உள்ள ராகு, கேது உருவான விதம், மனித வாழ்வில் அவை ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மகிமையை சொல்லும் படம், இது. கதை, வசனம், பாடல்களை கே.பி.அறிவானந்தம் எழுதியிருக்கிறார். சாந்தி பாலசுந்தரம் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: எஸ்.ஆனந்த், வி.உமாதேவி.
அதிக பொருட்செலவில் படம் தயாராகிறது. ‘கிராபிக்ஸ்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன. படப்பிடிப்பு முடிவடைந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடைபெறுகின்றன”.