டைரக்டர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும் படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.
சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெபி அமலன், ஜெபி அலெக்ஸ் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீகண்டன் ஆனந்த் சொல்கிறார்:
“இது, மறுபிறவி கதையம்சம் கொண்ட திகில் படம். கதாநாயகன், கலைக்கல்லூரி மாணவர். கதாநாயகி, காட்டுவாசி. இன்னொரு நாயகி, டாகுமென்டரி படம் எடுப்பவர்.
ரான் ஏதன் யோஹான் இசையமைக்கிறார். இவர், ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் தேனி மாவட்டம் குரங்கனி பகுதியில் படமாக்கப்பட்டன”.