தீங்கிரை

சைக்கோ, கிரைம், த்ரில்லர் ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தீங்கிரை’ படத்தின் சினிமா முன்னோட்டம்.;

Update:2021-01-28 19:13 IST
இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்தும், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் பிரபலமான வெற்றியும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு, ‘தீங்கிரை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் கதாநாயகியாக அபூர்வா ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில், ‘நிழல்கள்’ ரவி நடிக்கிறார். பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். ‘தீங்கிரை’ பற்றி இவர் கூறியதாவது:-

“சூழ்நிலை சிலரை இரையாக்கும். வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் தொடங்கி, தீங்கு செய்யும். அதுவே ‘தீங்கிரை.’ சைக்கோ, கிரைம், த்ரில்லர் பாணியில் உருவாகும் படம், இது. கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகிறது. ஏ.கே.குமார் தயாரிக்கிறார்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர இருக்கிறது”.

மேலும் செய்திகள்