அமீரா

“ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கில் விசாரணை நடத்தி, குற்றவாளியை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்று தருகிறார்.;

Update:2021-01-28 22:34 IST
‘அமீரா’ படத்தில் போலீஸ் வேடத்தில் சீமான்

‘நாம் தமிழர்’ கட்சிஒருங் கிை-ணப்பாளர் சீமான், ‘அமீரா’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். அவருடன் இன்னொரு நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். மலையாள நடிகை அனுசித்தாரா கதாநாயகியாக வருகிறார். ரா.சுப்பிரமணியன் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கில் விசாரணை நடத்தி, குற்றவாளியை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்று தருகிறார். தண்டனை காலம் முடிந்து அந்த குற்றவாளி ஜெயிலில் இருந்து திரும்பும்போது, அவர் உண்மையான குற்றவாளி அல்ல என்று தெரியவருகிறது.

உண்மையான குற்றவாளியை தேடி, அந்த போலீஸ் அதிகாரி பயணமாகிறார். குற்றவாளியை அவர் பிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் படத்தை தம்பி திரைக்களம், ஸ்டூடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன”.

மேலும் செய்திகள்