செம திமிரு

பிரபல நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவா சர்ஜா, தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.;

Update:2021-02-18 19:14 IST
நடிகர் அர்ஜூனின் உறவினரான துருவா சர்ஜா கன்னடத்தில் முன்னணி கதநாயகனாக திகழ்கிறார். அவர் அடுத்து நடித்துள்ள பொகுரு படம் தமிழில் செம திமிரு என்ற பெயரில் ஒரே நாளில் வெளியாகிறது. 

வரும் 19ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா, சம்பத், பவித்ரா லோகேஷ், ரவிஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். ஷிவார்ஜூன், பிகே,கங்காதர் தயாரித்துள்ள படத்தை தமிழில் அர்ஜூனே வெளியிடுகிறார். 

இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரித்துள்ளனர். ஓளிப்பதிவை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் கையாண்டுள்ளார், இசை சந்தன் ஷெட்டி.

மேலும் செய்திகள்