டான்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 19-வது படம், ‘டான்’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2021-02-19 19:36 IST
சிவகார்த்திகேயன், ‘டாக்டர்’, ‘அயலான்’ ஆகிய 2 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படங்கள் திரைக்கு வர தயாரான நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், ‘டான்’. இதில் கதாநாயகியாக நடிப்பவர், பிரியங்கா மோகன். டைரக்டர் அட்லியிடம், ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 2 படங்களிலும் உதவி டைரக்டராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

லைகா புரொடக் ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

‘டான்’ படத்தை பற்றி சுபாஸ்கரன் அல்லிராஜா கூறுகையில், ‘‘சிவகார்த்திகேயன் நடிக்கும் 19-வது படம், இது. படத்துக்கு படம் தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி செல்லும் அவர், இந்த படத்துக்குப்பின் மேலும் ஒரு படி உயர்வார். ரசிகர்களுக்கு இது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும்’’ என்கிறார்.

‘டான்’ படம் தொடங்கியது சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா

சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘ஹீரோ’. அதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருந்தார். மித்ரன் இயக்கி இருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘டான்’, வளர இருக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியா அருள் சங்கர் நடிக்கிறார். இவர், கேரள அழகி. வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார். இன்னொரு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மற்றும் சூரி, சமுத்திரக்கனி, பாலசரவணன் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை சிபிசக்ரவர்த்தி டைரக்டு செய்கிறார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

மேலும் செய்திகள்