ராதே சியாம்

10 வருடங்களுக்கு பிறகு காதல் படத்தில் பிரபாஸ் ராதே சியாம் சினிமா முன்னோட்டம்.;

Update:2021-02-19 22:46 IST
தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமானார். அவர் நடித்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில், ‘ராதே சியாம்’ என்ற பிரமாண்டமான படம் உருவானது.

இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். ராதாகிருஷ்ணகுமார் டைரக்டு செய்துள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் காதல் படம், இது. முக்கிய காட்சிகள் ரோமில் படமாக்கப்பட்டது.

வருகிற ஜூலை 30-ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

‘ராதே சியாம்’ படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்