ஸ்டைலிஷ்
ராணுவ வீரரின் கதையில் விஷ்ணுவர்தனின் இந்தி படம் சினிமா முன்னோட்டம்.;
தென்னிந்திய சினிமாவில், ‘ஸ்டைலிஷ்’ டைரக்டர் என பெயர் வாங்கியவர், விஷ்ணுவர்தன். இவர், `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். ‘செர்ஷா’ என்ற இந்தி படம் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகம் ஆகிறார்.
கார்கில் போரில் கலந்துகொண்டு `பரம் வீர சக்ரா விருது' பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கரண் ஜோகர் தயாரித்துள்ளார்.
சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வாணி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் நடந்து முடிந்தன. கொரோனா பொது முடக்கம் காரணமாக படத்தை திரைக்கு கொண்டுவரும் தேதி தள்ளிப்போய்க் கொண்டே போனது.
தற்போது, ‘செர்ஷா’ படம் வருகிற ஜூலை மாதம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில், இந்த படம் திரையிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.