பிரியா பவானி சங்கருடன் ஹரி டைரக்‌ஷனில், அருண் விஜய்

அருண் விஜய்யின் தங்கை பிரீதாவை டைரக்டர் ஹரி திருமணம் செய்து இருக்கிறார்.;

Update:2021-03-08 21:10 IST
டைரக்டர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் மச்சான்-மைத்துனர். அருண் விஜய்யின் தங்கை பிரீதாவை டைரக்டர் ஹரி திருமணம் செய்து இருக்கிறார். இருப் பினும், இருவரும் இணைந்து பணிபுரியாத சூழ்நிலை இருந்து வந்தது. முதல்முறையாக இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் இணை கிறார்கள்.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 33-வது படம். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ராஜேஷ், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெடிக் காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஹரி இயக்கும் 16-வது படம், இது.

மேலும் செய்திகள்