மாயமுகி

சமூக பிரச்சினைகளுடன் ஆன்மிகம் கலந்த ‘மாயமுகி’ சினிமா முன்னோட்டம்.;

Update:2021-03-08 21:58 IST
சமூக பிரச்சினைகளுடன் ஆன்மிகம் கலந்த படமாக தயாராகிறது, ‘மாயமுகி.’ கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படம், இது. இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், கார்த்திகா, ஆம்னி, சுவாதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் சிறுவர்களையும் தியேட்டருக்கு அழைத்து வரும் கதையம்சம் கொண்ட படம், இது. சமூக பிரச்சினைகள் பற்றியும் படம் பேசும்.

தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை பி.எம்.ரவிநாயக் டைரக்டு செய்கிறார். டில்லி பாபு கே.தயாரிக்கிறார்.

சினிமா முன்னோட்டம்.

மேலும் செய்திகள்