நகைச்சுவை-திகிலுடன், ‘ஹாஸ்டல்'
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் `ஹாஸ்டல்'. இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.;
நாசர், சதீஷ், முனிஷ்காந்த், ரவிமரியா, கிரிஷ், யோகி, அறந்தாங்கி நிஷா, ராமதாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்துள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “கட்டுப்பாடான ஆண்கள் விடுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பெண் சிக்கிக் கொள்கிறாள். இதனால் விடுதியில் நடக்கும் சம்பவங்களும், அவள் எப்படி வெளியேறுகிறாள் என்பதுமே கதை. முழு நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. திகில் விஷயமும் படத்தில் இருக்கும். அசோக் செல்வன் மாணவராகவும், நாசர் கண்டிப்பான விடுதி வார்டனாகவும், முனீஸ்காந்த் அவரது உதவியாளராகவும் வருகிறார்கள். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக ‘ஹாஸ்டல்’ இருக்கும். கல்லூரி விடுதி அரங்கு அமைத்து பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ரொம்ப வருடங்களுக்கு பிறகு ஹாஸ்டலில் நடக்கும் சம்பவங்களை மையப் படுத்திய படமாக தயாராகி உள்ளது” என்றார். படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.