விளையாட்டில் அரசியல் கலந்த ‘நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியவர், செ.ஹரி உத்ரா. இவர், ‘நம்பர் 6, வாத்தியார் கால் பந்தாட்ட குழு’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.;

Update:2021-03-26 22:36 IST
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது? என்பதே திரைக்கதை. 90 சதவீத சம்பவங்கள் இரவில் நடைபெறுகின்றன. கதாநாயகன் புதுமுகம் சரத். கதாநாயகி ஐரா. சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உசா, செ.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜ கால்பந்து வீரர்கள் சிலர், படத்தில் பங்கேற்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்