திடுக்கிடும் மர்மங்களுடன் சுந்தர் சி. நடிக்கும் புதிய படம்

சுந்தர் சி கதாநாயகனாக நடித்து சில படங்களை இயக்கியும் வந்தார். சில வருடங்களாக அவர் படங்களை இயக்கவில்லை.;

Update:2021-03-26 22:54 IST
கதா நாயகனாக மட்டும் நடித்து வருகிறார். இந்த வரிசையில், அவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் ஆகிய இருவரும் கதைநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சில புதுமுகங்களும் நடிக்கிறார்கள். மணிகண்டராமன் தயாரிக்க, மணி செயோன் இயக்குகிறார். இவர், ‘கட்டப்பாவை காணோம்’ படத்தை டைரக்டு செய்தவர்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்