மதுரை மணிக்குறவன்

இளையராஜா இசையில் ‘மதுரை மணிக்குறவன்’;

Update:2021-04-05 19:43 IST
“20 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட கொலை குற்றத்தை கண்டுபிடிக்க உயர் போலீஸ் அதிகாரி ஒரு கிராமத்துக்கு வருகிறார். விசாரணையில் கொலை செய்யப்பட்ட இருவரும் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்ற உண்மை அவருக்கு தெரியவருகிறது.

அவர் கூடப்பிறந்த சகோதரன் மதுரையில் இருக்கிறார் என்பதும் அவருக்கு தெரிகிறது. கொலைகாரன் யார்? போலீஸ் அதிகாரி மதுரைக்கு சென்று சகோதரனை சந்தித்தாரா? என்பதை திடீர் திருப்பங்களுடன் சொல்லும் படம்தான், ‘மதுரை மணிக்குறவன்’ என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் ராஜரிஷி. இவர் மேலும் கூறுகிறார்:

“தூத்துக்குடி, மதுரை சம்பவம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான ஹரிகுமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகி, மாதவி லதா. தயாரிப்பாளர் ஜி.காளையப்பன் ஆர்ப்பாட்டமான வில்லனாக அறிமுகமாகிறார். இவருடன் சுமன், சரவணன், ராதாரவி, ராஜ்கபூர், எம்.எஸ்.பாஸ்கர், கவுசல்யா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். முத்துலிங்கம் பாடல்களை எழுத, இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மதுரை, தேனி, குரங்கனி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது”.

மேலும் செய்திகள்