கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘கர்ணன்’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2021-04-08 22:39 IST
தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார். திலீப் சுப்புராயன் ஸ்டாண்ட் பணிகளை கவனித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்