‘பகையே காத்திரு’ படத்தில், விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு, ‘பகையே காத்திரு’ என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Update: 2021-04-21 06:17 GMT
இந்த படத்தை புது டைரக்டர் ஏ.மணிவேல் இயக்குகிறார். இவர், ‘காக்கி’ என்ற குறும் படத்தை டைரக்டு செய்தவர். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“இதுவரை விக்ரம் பிரபு நடித்த படங்களில் இருந்து இது மாறுபட்ட படமாக இருக்கும். முழுக்க முழுக்க அதிரடி சண்டை மற்றும் திகில் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது.

கதாநாயகி, ஸ்முருதி வெங்கட். சாய்குமார் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடிக்க, நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். செல்வகுமார் எஸ். ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ராசி.முத்துசாமி தயாரிக்கிறார்.

சென்னை, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடக்கிறது”.

மேலும் செய்திகள்