சிறப்பு பேட்டி
கீர்த்தி சுரேசை கவர்ந்த கதாபாத்திரம்

சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
சாமி, சண்டக்கோழி படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். கீர்த்தி சுரேசுக்கு படங்கள் குவிவது சக நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கிலும் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தயாராகும் பழைய நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

சாவித்ரியாக நடிக்க அழைத்ததும் அந்த கதாபாத்திரம் எனக்கு சரிப்பட்டு வருமா? என்று பயந்தேன். மேக்கப் போட்டு என் தோற்றத்தை அவர் மாதிரி மாற்றிய பிறகு நம்பிக்கை வந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்தேன். சாவித்ரி நடித்த படங்களை பார்த்தேன். அவர் சம்பந்தமான புத்தகங்களையும் படித்தேன். நடிகையர் திலகம் பட்டத்துக்கு பொருத்தமானவர் சாவித்ரி. அவரது வாழ்க்கை கதையில் நடிப்பது எனக்கு பெருமை என்றார்.