மம்தா பானர்ஜியின் கோட்டையை தகர்த்தது பா.ஜனதா...!

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

Update: 2019-05-23 12:15 GMT
மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவியது. அது வாக்கு எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது. மாநிலத்தில் 23 தொகுதிகளில் வெல்வோம் எனக் களமிறங்கிய பா.ஜனதா அதனை நிறைவேற்றும் வகையில் முன்னிலையை பெற்றுள்ளது.

மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

பா.ஜனதா கட்சி 18 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. மாநிலத்தில் இடதுசாரிகள் படுதோல்வி என்ற நிலையை எதிர்கொண்டுள்ளது. மம்தாவிற்கு எதிராக பா.ஜனதா பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக தேர்தல் முடிவுகள் காட்டி வருகிறது. மம்தாவின் கோட்டையை பா.ஜனதா தகர்த்துள்ளது.  

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ்  கட்சிக்கு பா.ஜனதாவின் வளர்ச்சி பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்