‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

டெல்லியில் ரஜவுரி கார்டன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரடியாக காண்பிக்க முடிவு செய்தார்.;

Update:2021-10-22 23:40 IST
‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
அதற்காக, ‘பேஸ்புக் லைவ்’ பக்கத்தை திறந்து வைத்தார். தைராய்டு சிகிச்சைக்கு பயன்படுத்தும் திரவ மருந்தை குடித்தார். இதற்கிடையே, இதுகுறித்து டெல்லி போலீசுக்கு ‘பேஸ்புக்’ தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உஷார் அடைந்த சைபர் கிரைம் போலீசார், துரிதமாக செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

உடனே அங்கு சென்றனர். வீட்டில் அந்த நபர் அரை மயக்கத்தில் இருந்தார். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். இவை அனைத்தும் ஒன்றரை மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்தன. இதனால், தற்கொலைக்கு முயன்ற அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

மேலும் செய்திகள்