மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி
சாம்ராஜ்நகரில், மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.;
சாம்ராஜ்நகர்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொட்டமால்வடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திர குமார். சுனில் குமார், பிரதீப் குமார், சந்தோஷ் குமார். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் குண்டலுபேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 4 பேரும், மைசூரு லலிதாபுராவை சேர்ந்த ரவிக்குமார் என்ற நண்பரை அழைக்க காரில் மைசூரு நோக்கி வந்துள்ளனர்.
அப்போது லலிதாபுரா அருகில் வந்தபோது திடீரென்று கார் தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் மகேந்திர குமார், சுனில் குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி சதார்த்தி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.