வேலை செய்த நிறுவனத்தில் திருடிய ஊழியர் கைது

வேலை செய்த நிறுவனத்தில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-28 20:19 IST

பெங்களூரு:

பெங்களூரு கோரமங்களா பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த சில தினங்களாக அடிக்கடி மடிக்கணினிகள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரின்பேரில் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நிறுவனத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒரு ஊழியரே மடிக்கணினிகளை திருடியது தெரிந்தது. இதனால் அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னை மட்டுமே குறிவைத்து மேலாளர் அதிகமாக வேலை வழங்கியதால் கோபத்தில் மடிக்கணினிகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின்பேரில்  8 மடிக்கணினிகளை போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்