வியாபாரி மீது தாக்குதல்; 2 பேர் கைது
பெங்களூருவில் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.;
பெங்களூரு:
பெங்களூரு காட்டன்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர் (வயது 33), வியாபாரி. கடந்த 13-ந் தேதி மெஜஸ்டிக் பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வைத்து சுந்தருக்கும், 2 நபர்களுக்கும் இடையே செல்போன் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 2 நபர்களும் சுந்தரை அடித்து, உதைத்தும், கத்தியால் தாக்கிவிட்டும் தப்பி ஓடி இருந்தனர்.
இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், சுந்தரை தாக்கியதாக உரமாவு பகுதியை சேர்ந்த அஜய் (24) மற்றும் பிரசன்னா (38) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.