மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2022-07-17 20:47 IST

பெங்களூரு:

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் வசித்தவர் கார்த்திக் (வயது 26). ஆந்திராவை சேர்ந்த இவர், சஞ்சய்காந்தி ஆஸ்பத்திரியில் லேப் டெக்னிஷியனாக வேலை செய்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் வேலை முடிந்து கார்த்திக் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

ஜெயநகர் அருகே வைத்து கார்த்திக் மற்றும், அதே சாலையில்வந்த சந்தோஷ் ஆகிய 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்து கார்த்திக் இறந்துவிட்டார். படுகாயம்அடைந்த சந்தோஷ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்