வாகனம் மோதி முதியவர் பலி
பெங்களூருவில் வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.;
பெங்களூரு:
பெங்களூரு வில்சன்கார்டன் அருகே மரிகவுடா ரோட்டில் நேற்று நள்ளிரவு நடந்து சென்ற ஒரு முதியவர் மீது ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து வில்சன்கார்டன் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டியை தேடிவருகிறாா்கள்.