வாகனம் மோதி முதியவர் சாவு

பெங்களூருவில் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.;

Update:2022-06-16 20:37 IST

பெங்களூரு:

பெங்களூரு சிக்கஜாலா அருகே வசித்து வந்தவர் தாசப்பா (வயது 61). இவர், கோலார் மாவட்டத்தில் நடந்த தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு பஸ்சில் திரும்பினார். பஸ் நிலையத்தில் இருந்து அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். பெட்டஅலசூரு கிராஸ் பகுதியில் வைத்து தாசப்பா மீது ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாசப்பா பலத்தகாயம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்