பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கோலார் தங்கவயலில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-10-26 18:45 GMT

கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கோலார் தங்கவயல்:

கர்நாடகத்தில் புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டால், ஒரு சில மாவட்டங்களில் பனிபொழிவு காணப்படுவது வழக்கம். குறிப்பாக கோலார் தங்கவயல், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அதிகாலை நேரங்களில் எதிரே வரும் நபர்கள் மற்றும் வாகனங்கள் கூட கண்ணிற்கு தெரியாமல் போய்விடும்.

தற்போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிவிட்டது. இருப்பினும் இந்த பனிமூட்டம் குறையவில்லை. அதிலும் கோலார் தங்கவயலில் பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. இரவு குளிர் வாட்டி வதைப்பதாக கூறப்படுகிறது. இந்த பனி மூட்டத்தால் ஏராளமான விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கோலார் தங்கவயலில் சில இடங்களில் சாலையோர கடைகள் அதிகாலை நேரம் ஆகியும் திறக்காமல் இருந்தது. மேலும் சாலைகளில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பனி மூட்டம் குறைந்த பின்னர்தான் பொதுமக்கள் நடமாட்டம் படிப்படியாக அதிகரித்தது. ஆனால் வெளியூர்களுக்கு வேலை செல்வதற்காக ரெயில்களில் பயணம் செய்பவர்களுக்கு வழக்கம்போல பணிக்கு சென்றனர். பனிமூட்டம் காரணமாக பலர் வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் கோலார் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் இருக்கைகள் காலியாக கிடந்தது. இதனால் பயணிகள் சுதந்திரமாக பயணிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.மேலும் சில நாட்களுக்கு இந்த பணி பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்