அசுத்த குடிநீரை குடித்த இறந்த 3 பேரில் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: பசவராஜ் பொம்மை அறிவிப்பு

ராய்ச்சூரில் அசுத்த குடிநீரை குடித்த இறந்த 3 பேரில் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் என பசவராஜ் பொம்மை அறிவித்தார்.;

Update:2022-06-06 20:53 IST

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராய்ச்சூரில் அசுத்த நீரை குடித்த 3 பேர் இறந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தனருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் ராய்ச்சூர் நகரசபையில் அனைத்து வார்டுகளிலும் குடிநீரை பரிசோதிக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் ஏதாவது தவறு செய்தார்களா? என்பது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மூலமும் விசாரணை நடத்தப்படும். அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு அரசின் சேவைகளை, திட்டங்களின் பயன்களை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்