பாரம்பரிய நடைபயணம்

ைமசூருவில் தசரா விழா பாரம்பரிய நடைபயணம் துணை மேயர் ரூபா தொடங்கி வைத்தார்;

Update:2023-10-22 00:15 IST

மைசூரு:

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மைசூரு டவுன் ஹால் பகுதியில் தசரா விழா பாரம்பரிய நடைபயணம் நடந்தது. தொல்பொருள் துறை சார்பில் நடந்த இந்த பாரம்பரிய நடைபயணத்தை துணை மேயர் ரூபா தொடங்கி வைத்தார். இந்த நடைபயணத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த பாரம்பரிய நடைபயணம் கே.ஆர்.சர்க்கிள், கே.ஆர். ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் உள்ள பகுதி வழியாக சென்றது. அப்போது பாரம்பரிய கட்டிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்