கொள்ளை வழக்குகளில் வாலிபர் பிடிபட்டார்
பெங்களூருவில் கொள்ளை வழக்குகளில் வாலிபர் பிடிபட்டார்.;
பெங்களூரு:
பெங்களூரு கலாசி பாளையம் போலீசார், நகரில் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வாலிபரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் பழைய குட்டதஹள்ளியை சேர்ந்த சையத் சுகேப் (வயது 22) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவார். அப்போது தனியாக செல்லும் நபர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, செல்போன்களை கொள்ளையடித்து வந்தார்.
சாலையில் தனியாக செல்போனில் பேசியபடி செல்லும் செல்போன்களை பறித்து வந்ததும் தெரிந்தது. சையத் சுகேப்பிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.