கர்நாடகத்தில் 5 லட்சம் பேர் யோகா பயிற்சி செய்யும் 'யோகத்தான்';மந்திரி நாராயணகவுடா பேட்டி

கர்நாடகத்தில் 5 லட்சம் பேர் யோகா பயிற்சி செய்யும் ‘யோகத்தான்' வருகிற ஆகஸ்டு 28-ந் தேதி நடக்கிறது என மந்திரி நாராயணகவுடா கூறியுள்ளார்.;

Update:2022-07-11 20:44 IST

பெங்களூரு:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தந்து யோகா தினத்தை கொண்டாடினார். யோகாவின் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் சுதந்திர தின பவள விழா ஆண்டையொட்டி கின்னஸ் சாதனைக்காக வருகிற ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி கர்நாடகத்தில் 'யோகத்தான்' அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் 5 லட்சம் பேர் யோகா பயிற்சி செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தூதராக நடிகர் ரமேஷ் அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வீட்டிற்கும் யோகாவை கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். அதன் முக்கியத்துவம் உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும். யோகாவுக்கு விளையாட்டு அந்தஸ்து வழங்கப்பட்டு அதை கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளில் சேர்க்கப்பட்டது. யோகா பயிற்சி செய்வதால் உடல் நலன் பேணப்படுகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த யோகா கலை நமது நாட்டில் உருவானது.

இவ்வாறு நாராயணகவுடா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்