ஆர்.இ.சி. லாபம் 30% அதிகரிப்பு

மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஆர்.இ.சி. பங்கு ரூ.141-க்கு கைமாறியது.;

Update:2020-02-15 17:15 IST
பொதுத்துறையைச் சேர்ந்த ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) நிறுவனம், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் (2019) ரூ.1,667 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,284 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.6,627 கோடியில் இருந்து) ரூ.7,534 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், வருவாய் அடிப்படையில் 10 சதவீத வளர்ச்சி காண ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருந்த 52.63 சதவீத பங்குகளையும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி) நிறுவனம் வாங்கி விட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.14,500 கோடிக்கு இந்தப் பங்குகள் கைமாறின.

மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஆர்.இ.சி. பங்கு ரூ.141-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.143.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.139.10-க்கும் சென்றது. இறுதியில் ரூ.139.55-ல் நிலைகொண்டது.

மேலும் செய்திகள்