தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை குழுவுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை - உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு

முதல்-அமைச்சருடனான மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.;

Update:2021-06-08 14:53 IST
தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை குழுவுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை - உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு
சென்னை,

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவை மாற்றியமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன் துணைத் தலைவராக பேராசியர் ஜெயரஞ்சன், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராமஸ்ரீனிவாசன் மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடன், மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுடனான முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களுக்கான புதிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

அதன்படி பேராசிரியர் ஜெயரஞ்சனுக்கு விவசாயம் கொள்கை மற்றும் திட்டமிடுதல் துறையும், பேராசிரியர் ராமஸ்ரீநிவாசனுக்கு திட்ட ஒருங்கிணைப்புத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் இதர உறுப்பினர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்