ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-28 19:15 GMT

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சீதா, சிவ சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், இணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசு வழங்கும் பொருட்கள், மாநில அரசு வழங்கும் பொருட்கள் என 2 ரசீதுகள் போடப்பட வேண்டும் என்ற உத்தரவால் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே ஒரே ரசீதாக போடும் வகையில் தமிழக அரசு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவிகள் 2ஜி, 3ஜி இணையதள வசதியையே கொண்டுள்ளதால் பதிவு செய்து பொருட்கள் வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 4 ஜி தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட கருவிகள் மற்றும் அதற்குரிய சிம் கார்டுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்