சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மோகனூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-11-25 00:15 IST

1¾ டன் ரேஷன்அரிசி

நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மோகனூர் ரவுண்டானா அருகில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் 28 மூட்டைகளில் இருந்த 1,700 கிலோ ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

டிரைவர் கைது

இந்த ரேஷன்அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் பரமத்திவேலூரை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. தலைமறைவான சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்