பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் உரையாடல்

பாப்பாரப்பட்டியில் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு; பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் உடரையாடினார்.

Update: 2022-05-31 16:29 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி தனியார் திருமண மஹாலில் காணொலி மூலம் பிரதமர் மோடி விவசாயிகளுடன் உரையாடல் நடத்தும் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், வேளாண்மை துணை இயக்குனர்கள் குணசேகரன், பூவண்ணன், முகமது அஸ்லாம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினர்.

இதில் வேளாண் பல்கலைக்கழக மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா கிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி 11-வது தவணை விவசாயிகள் உதவித்தொகை வழங்கி காணொலி மூலம் விவசாயிகளுடன் உடரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்