புதிதாக 14 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update:2023-04-15 01:32 IST

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 ஆயிரத்து 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 14 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 191 ஆக உயர்ந்தது. இது வரை 75 ஆயிரத்து 200 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 7 பேர் குணமடைந்து சென்றனர். தற்போது வரை கொரோனா பாதித்த 83 பேர் கடலூர் மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வெளி மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 88 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இது வரை கொரோனாவுக்கு 896 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்