500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

பீஞ்சமந்தை மலையில் 500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

Update: 2023-10-02 12:16 GMT

வேலூர் அருகே உள்ள மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்கவும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாராய ஊறல்களை அழிக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பீஞ்சமந்தை மற்றும் அதனையொட்டிய மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பீஞ்சமந்தை மலையில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பேரல்களில் 500 லிட்டர் சாராய ஊறல், 200 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய அடுப்புகள், பேரல்களை அடித்து நொறுக்கினார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்