பழுதடைந்து கிடக்கும் நூலகம்

எருமாட்டில் பழுதடைந்து கிடக்கும் நூலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2023-06-21 03:00 IST

பந்தலூர்

பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் கிளை நூலகம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நாளிதழ்கள், புத்தகங்களை படித்து பயன் பெற்று வருகின்றனர். நூலக கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சுவர்களில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது. கட்டிடம் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. மேலும் நூலகத்துக்கு செல்லும் நடைபாதை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் நூலகத்திற்கு வந்து செல்லும் வாசகர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நூலக கட்டிடத்தை சீரமைப்பதோடு, சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்