ஆட்டு கிடைகளை அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கம்பம் பகுதியில் ஆட்டு கிடைகளை அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.;

Update:2023-03-09 00:30 IST

கம்பம் பகுதியில் இரண்டாம்போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் புற்கள் அதிகமாக உள்ளது.

இதனையடுத்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் தங்களது ஆடுகளை கம்பம் பகுதியில் உள்ள வயல்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதேபோல் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, அப்பி பட்டியை சேர்ந்த ஆடு வளர்ப்பவர்களும் கம்பம் பகுதியில் கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகின்றனர். விவசாயிகளும் ஆட்டு கிடை அமைப்பதில் தீவிரமாக உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ஆடுகளை கொட்டகை அமைத்து வளர்த்து வருவதை காட்டிலும், கிடை அமைப்பதால் ஆடுகள் ஓடி திரிந்து மேயும் போது நல்ல வளர்ச்சி அடைகின்றன. அந்த ஆடுகளுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கும். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வயல்களில் ஆட்டு கிடை அமைக்கப்படும் போது ஆடுகளின் கழிவுகள் வயல்களுக்கு உரமாகவும், மண் வளம் பெறும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்