அ.தி.மு.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்
அ.தி.மு.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது;
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்ட அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை நகர் செயலாளர் என்.எம். ராஜா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜான் மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் வாஹித், மணிமுரசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, ஸ்ரீதர், சிவாஜி, மகளிர் அணி அமைப்பாளர் ஜாக்குலின், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஆர்.எம்.எல்.மாரி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோவன், துணை செயலாளர் வக்கீல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அசோகன் நன்றி கூறினார்.