வடசித்தூரில்மது விற்றவர் சிக்கினார்
வடசித்தூரில் மது விற்றவர் சிக்கினார்;
நெகமம்
நெகமம் அடுத்த வடசித்தூர் பகுதியில் நெகமம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது இதையடுத்து வடசித்தூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள இடத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பேரனூரை சேர்ந்த தினேஷ் (வயது 28) என்பவர் மதுபாட்டில் வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்தார். அப்போது போலீசாரை கண்டதும், ஓட முயன்றார். போலீசார் தினேஷை விரட்டி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.